Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தற்கொலை செய்த முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு

ஒரே பதவி - ஒரே ஓய்வூதியத்தை தங்கள் கோரிக்கைகளுக்கு ஏற்றவாறு நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பலர் போராடி வரும் நிலையில் இந்த போராட்டத்தில் பங்குப்பெற்ற ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான ராம் கிஷன், நேற்று தற்கொலை செய்து கொண்டார்.


இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அவரது உடலை காணவந்த ராகுல்காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக டெல்லி மாநில அரசு தெரிவித்துள்ளது.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ