Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரத்தன் டாடா ஊழல்வாதி- சுப்பிரமணியன் சுவாமி சாடல்

பா.ஜ.க ராஜ்யசபா எம்.பி.  சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,  "டாடா குழும வரலாற்றிலேயே ரத்தன் டாடாதான் மிகவும் ஊழல்வாதி. அவர் டாடா குடும்ப வாரிசே கிடையாது. சைரஸ் மிஸ்ட்ரிக்கு அநீதி செய்துதான், ரத்தன் மீண்டும் தலைவர் பதவிக்கு வந்துள்ளார். மிஸ்ட்ரி தலைமையில் டாடா குழுமம் சிறப்பாக செயல்பட்டு வந்தது. ரத்தனுக்கு மிஸ்ட்ரி மீது பொறாமை.

ரத்தனுக்கு 2 ஜி, ஏர் ஏசியா உள்பட பல ஊழல் வழக்குகளில் தொடர்புள்ளது. இதில் இருந்து தப்பிக்கதான் தற்போது இந்த பதவியை பிடித்துள்ளார்.  எனவே, அரசு இந்த விஷயத்தில் தலையிட வேண்டும். மேலும் ரத்தன் எந்தெந்த பிரிவுகளில் சட்டங்களை மீறியுள்ளார் என்ற விவரங்கள் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்" இவ்வாறு  கூறினார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close