Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய அதிகாரிகளை உளவாளி என சித்தரித்த பாகிஸ்தான்

பாகிஸ்தானில் இயங்கும் உள்ளூர் செய்தி ஊடகங்களில், பாகிஸ்தானில் உள்ள  இந்திய தூதரக அதிகாரிகள் எட்டு பேரின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு, அவர்களை உளவாளிகள் என்றும் பயங்கரவாத தொடர்புடையவர்கள்  என்றும் செய்தி வெளியிட்டு வருகிறது.
 


பாகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.  மேலும் நேற்று முதலே பாகிஸ்தான் ஊடகங்கள் இந்திய அதிகாரிகளின் மீது வீண்பழி சுமத்தி அவர்கள் புகைப்படங்களை வெளியிட்டு வருவதால், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள களங்கத்துக்கு இழப்பீடு வழங்கப்படும் என விகாஸ் தெரிவித்துள்ளார். இந்திய தூதரக அதிகாரிகள் எட்டு பேரை பாகிஸ்தானில் இருந்து திரும்பப்பெறப் போவதாக இந்திய வெளியுறவுத் துறை  விகாஸ் நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close