Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீவிரவாதிகள் பென்ட்ரைவில் மோடி படம் : கேரள குண்டு வெடிப்பின் மர்ம பின்னணி

கேரளாவில் இரண்டு நாட்களுக்கு முன்பு மலப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நிறுத்தப்பட்ட காரில்  குண்டு வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பகுதியை காவல்துறை ஆய்வு செய்ததில், கடிதம் மற்றும் பென்ட்ரைவ் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. 

கைப்பற்றப்பட்ட பென்ட்ரைவில் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் மற்றும் பாபர் மசூதி இடிப்பு வீடியோக்கள் உள்ளதாகவும், பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் குண்டு வெடித்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில் , உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாத்ரி அருகே அடித்துக் கொல்லப்பட்ட முதியவர் முகமது இக்லாக்கின் மரணத்துக்கு பழிவாங்கப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தில் தமிழகத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும்  "அல்-உம்மா” பயங்கரவாத அமைப்பினருக்கு தொடர்பு இருக்கலாம் என புலனாய்வுத்துறை சந்தேகம் எழுப்பி உள்ளது. 
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ