Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வண்ணமயமாகும் பெங்களூரு! களமிறங்கும் திருநங்கைகள்!

சுவர் ஓவியங்களைப் பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்

லக்ட்ரானிக் சிட்டி, கார்டன் சிட்டி என்றெல்லாம் என்றழைக்கப்படும் பெங்களூரு மக்கள் நெரிசலால் திணறி வருகிறது. நெரிசலில் திணறும் மக்களிடம் கலை உணர்வை மீட்டெடுக்கும் வகையில் பெங்களூரு நகரைத்தை வண்ணமயமாக்கும் பணியை ஸ்ட்ரீட் ஆர்ட் இந்தியா என்னும் தனியார் அமைப்பு முன்னெடுத்துள்ளது.

பெங்களுருவின் முக்கிய பகுதிகளான கெம்பே கவுடா, கே. ஆர் பூ மார்க்கெட், மல்லேஸ்வரம், கப்பன் பூங்கா போன்ற மக்கள் நடமாட்டமும் சுற்றுலா பயணிகள் நடமாட்டமும் அதிகம் உள்ள பகுதிகளின் சுவர்களில் நவீன கால ஓவியங்கள் மற்றும் பெங்களூருவின் அடையாளங்களை ஓவியங்களாக நிரப்புகின்றனர். இவர்களுடன் 'அரவாணி ஆர்ட் பிராஜக்ட்' என்னும் கலைக்குழுவும் இணைந்துள்ளது. இது தொடர்பாக ’அரவாணி ஆர்ட் பிராஜக்ட்’ அமைப்பின் நிறுவனர் பூர்ணிமா கூறியது.

“பெரும்பாலும் அழகான ஓவியங்களை அதற்கான கேலரிகளில் இருந்து பெரும் விலைகொடுத்துத்தான் வாங்க வேண்டி இருக்கிறது. கலை அனைவருக்கும் சொந்தம். எதற்கு தனி விலை கொடுக்கவேண்டும் என்ற கேள்வி எங்களுக்கு எழுந்தது. மேலும் பெங்களூருவின் நெருக்கடிக்களுக்கிடையே நகரத்தைத் தூய்மையாகவும் அழகாகக்கவும் வைக்க திட்டமிட்டோம். மேலும், ஒருவித மன அழுத்தத்திலேயே தினம் வேலைகளுக்குப் பயணித்துக்கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான பெங்களூரு வாழ் மக்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் ஸ்ட்ரீட் ஆர்ட் இந்தியா அமைப்புடன் கைகோத்துள்ளோம்” என்றவர் தனது ஆர்ட் பிராஜக்ட் குழுமத்தைப் பற்றி விவரிக்கத் தொடங்கினார்.

சுவர் ஓவியங்களைப் பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்

"எல்லோரையும் போல் நானும் திருநங்கைகள் தொடர்பான ஆவணப்படங்கள் எடுக்கத் தொடங்கியிருந்த காலம். அவர்களுடன் எனக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. அவர்களுடன் அதிகம் பழகப்பழக அவர்களுடைய ஆர்வம் பற்றித் தெரிந்து கொள்ளத் தொடங்கினேன். பெங்களூருவை ஒவியமாக்குவோம், அதற்கு அனைவரும் ஒருங்கிணைவோம் என்றேன். பெங்களூருவில் இருந்த பெரும்பாலான திருநங்கைகள் இதில் இணைந்து கொண்டார்கள். எங்கள் பணிகளில் மற்றவர்களைப் போலவே அவர்களுக்கும் சம உரிமை அளித்தோம். பேச்சுவாக்கில் அவர்களுடைய அன்றாடத் துன்பங்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டார்கள்.அவர்களுக்கு என்ன மாதிரியான நண்பர்கள் இருக்கிறார்கள், எதனால் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டார்கள், என்ன மாதிரியான இன்னல்களைச் சந்திக்கிறார்கள், சாதாரணமாகத் தெருவில் நடந்து சென்றால் கூட மக்கள் எந்த அளவுக்கு அவர்களைத் துன்புறுத்துகிறார்கள் என்பதை எல்லாம் கூறுவார்கள். அவர்கள் நம்மால் நிறையத் துன்பப்பட்டுவிட்டார்கள். இந்த சூழலில் அவர்களுக்கு இந்தப் பணி திருப்தி அளிப்பதாக இருக்கிறது” என்கிறார்.

மாற்றம்தான் சமுதாயத்தை முன்னெடுத்துச் செல்லும் என்பதை எப்போது உணரப்போகிறோம்?

சுவர் ஓவியங்களைப் பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்

- ஐஷ்வர்யா

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close