Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உணவு தானியங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு : அருண் ஜெட்லி

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிப்பு முறையை நடைமுறைப்படுத்தும்,  சரக்கு மற்றும் சேவை வரி மசோதா சட்டம் (Goods and Services Tax ), அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

 நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெறும்  ஜிஎஸ்டி வரி விகிதத்தை நிர்ணயிக்கும் இரண்டு நாள் கூட்டம்,  இன்று டெல்லியில்  தொடங்கியது. இன்று நடந்த கூட்டத்தில் 5%, 12%, 18% மற்றும் 28% கொண்ட நான்கு கட்ட ஜிஎஸ்டி வரி அமைப்பு இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களுக்கு குறைந்த வட்டி விகிதமும், ஆடம்பர பொருட்களுக்கு அதிக வட்டி விகிதமும் ஜிஎஸ்டி கவுன்சில் நிர்ணயித்துள்ளது. முக்கியமாக உணவு தானியங்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து  விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ