Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவுக்குள் ஊடுருவி கட்டுமானப் பணியை தடுத்த சீனா

மத்திய லடாக்கில், டெம்சொக் பகுதியில் நடந்து வரும்  நீர்ப்பாசனக் கால்வாய் கட்டுமானப் பணியை எதிர்த்து சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுப்பட்டுள்ளது. 

நேற்று  மதியம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் கிராமங்களில் குடிநீர் குழாய்கள் கட்டுமான பணி வேலை நடைபெற்று வருகிறது. எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (LAC) நுழைந்த 55  சீன ராணுவ வீரர்கள் மக்கள் பணிகளை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனை அறிந்த எல்லைப் பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்தது. இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. கட்டுமான பணிகளுக்கு இருதரப்பு ஒப்புதல் பெற வேண்டும் என சீன ராணுவத்தினர் கடுமையான வாக்குவாதம் நடத்தியுள்ளனர்.


பின்னர் சீன ராணுவம் இந்திய பகுதிக்குள் முன்னேறாத படி,  இந்திய ராணுவ மற்றும் இந்தோ திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் 70 பேர் அரண் அமைத்து உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close