Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'சுத்தி வளைச்சு..கதைய முடிச்சிடுங்க..' - அதிரவைக்கும் ஆடியோ ரிலீஸ்

போபால் மத்திய சிறையில் இருந்து தப்பிய் எட்டு சிமி தீவிரவாதிகளை போலீஸ் என்கௌன்ட்டர் செய்து சுட்டுக்கொன்றது. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே பல வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பின. இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள ஆடியோ ஒன்று பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. 

என்கௌன்ட்டரின்போது களத்தில் இருந்து போலீசாருக்கும், கன்ட்ரோல் ரூமுக்கும், உயர் போலீஸ் அதிகாரிக்கும் நடந்த தொலைபேசி உரையாடலின் ஆடியோ முழுவதும் வெளியாகியுள்ளது. அதில், "அவர்களை சுற்றி வளையுங்கள். பின் வாங்கவேண்டாம்.  எல்லோரையும் உடனே 'முடியுங்கள்'. ஐந்து பேர் அவுட்.... மீதி மூன்று பேர் இன்னும் உள்ளார்கள்." என்ற ரீதியில் பதிவாகியுள்ளது.

இந்த ஆடியோவினால், மீண்டும் பரபரப்பு கூடியுள்ளது.   

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ