Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மகாராஷ்டிராவில் 12 பள்ளிச் சிறுமிகள் பலாத்காரம்: 11 ஆசிரியர்கள் கைது

மகாராஷ்டிர மாநிலம் புல்தானா பகுதி அருகே உள்ள நினத் அஷ்ரான் என்னும் பள்ளியில்,  பழங்குடியினத்தைச் சேர்ந்த 12 மாணவிகள் ஆசிரியர்களால்  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

 பள்ளி விடுதியில் தங்கி இருந்த மாணவிகளை, அப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் இணைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். தீபாவளி விடுமுறைக்கு கிராமத்துக்குச் சென்ற அந்த மாணவிகள் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளனர். மேலும் அடிவயிற்றில் கடுமையாக வலி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். மருத்துவ சோதனை செய்ததில் மூன்று மாணவிகள் கர்ப்பமாக உள்ளது தெரிய வந்துள்ளது. பின்பு விசாரித்ததில், பள்ளி ஆசிரியர்கள்  பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. மாணவிகளின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close