Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“NDTV India” இந்தி செய்தி சேனலுக்கு ஒரு நாள் தடை: மத்திய அரசு அதிரடி

பதன்கோட்  தாக்குதலை  பற்றிய சில சென்சிட்டிவ் விவகாரங்களை  ஒளிபரப்பிய குற்றத்துக்காக பிரபல செய்தி ஹிந்தி சேனல்  “NDTV India”-வுக்கு 24 மணிநேர தடை விதிக்க,  தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் ( I&B ministry) குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்து வரும் நவம்பர் 9-ம் தேதி மதியம் 1 மணி முதல் மறுநாள் மதியம் 1 மணிவரை சேனல் ஒளிபரப்பத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

தாக்குதல் சம்பவத்தில், சில சென்சிட்டிவான  விவகாரங்கள் உள்ளதாகவும், என்.டி.டிவி பொறுப்பற்றத்தனமாக தாக்குதலை ஒளிபரப்பிவிட்டதாகவும்  I&B அமைச்சகம் தரப்பில் கூறப்படுகிறது. கேபிள் டிவி நெட்வொர்க்ஸ் (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ், இந்திய செய்தி சேனலுக்கு மத்திய அரசு 24 மணி நேர தடை விதிப்பது இதுவே முதல்முறையாகும்

மத்திய அரசின் தடையை பற்றி சாடி என்.டி.டிவி தனது இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அனைத்து ஊடகங்களைப் போன்று தான் என்.டி.டிவி-யும்   செய்தியை ஒளிபரப்பியது. மேலும் நடுநிலையோடு தான் அந்த பதன்கோட் தாக்குதல் சம்பவம்  பற்றி செய்தி வெளியிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ