Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’மோடி ஜி பொய் கூறுவதை நிறுத்துங்கள்’: ராகுல் காட்டம்

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தக் கோரி அண்மையில் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் ராம்கிஷனின் குடும்பத்தினர் தாக்கப்பட்டதற்கு, மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். 

ஓய்வுப்பெற்ற ராணுவ வீரர்களை சந்தித்துவிட்டு இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, “மோடி பொய் கூறுவதை நிறுத்திவிட்டு, ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற ராணுவத்தினருடன் பேசினேன்,  பணம் முக்கியமில்லை, நீதியும், மரியாதையும் தான் முக்கியம் என அவர்கள் கூறினார்கள். நாட்டில் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. விவசாயிகள் தாக்கப்படுகிறார்கள், ராணுவத்தினர் தாக்கப்படுகிறார்கள். மேலும் ராம்கிஷன் குடும்பத்தினர் தாக்கப்பட்டதற்கு மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close