Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘வார்த்தைகளால் வன்புணர்வு செய்த போலீஸ்’ - கேரள சோகம்!

 "பிரியங்கா "  என்ற தமிழ்த் திரைப்படத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் நடிகை ரேவதி ஆஜராகி சாட்சி சொல்வார். அப்போது, வழக்கறிஞராக வரும் நடிகர் நாசர், ரேவதியிடம் குறுக்கு விசாரணை என்ற பெயரில் உளவியல் ரீதியாகவும், ஆபாச வார்த்தைகளை உபயோகித்தும் கேள்விகள் கேட்டு துன்புறுத்துவார். இந்தத் திரைப்படத்தில் வரும் காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு, கேரளாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் ஒருவர், காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றபோது, அங்கிருந்த காவலர்கள் சிலர், அந்தப் பெண்ணிடம் தகாத முறையிலான கேள்விகள் கேட்டு துன்புறுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 33 வயதான பெண்ணை, அவரது கணவரின் நண்பர்கள் நான்கு பேர், கடந்த 2014-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினர். மிரட்டல் காரணமாக, அந்த பெண் தனக்கு நிகழ்ந்த கொடுமையை உடனடியாக யாரிடமும் தெரிவிக்கவில்லை. உடனடியாக காவல் நிலையத்திலும் அவர் புகார் அளிக்கவில்லை.

மிகுந்த  மன போராட்டத்துக்குப் பின், ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு, அந்தப் பெண் கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி காவல் நிலையத்தில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் குறித்து புகார் அளித்தார். முதலில் புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர், பாதிப்புக்குள்ளான பெண்ணை, கடுமையான வார்த்தைகளால் சித்ரவதை செய்துள்ளனர். பின்னர் அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விடுத்த மிரட்டல் காரணமாக, அந்தப் பெண்ணின்  புகாரைத் திரும்ப அளித்தனர்.

பாலியல் வன்கொடுமைக்கு ஒப்பானது!

அந்த பெண்ணுக்கு நடந்த கொடுமைகள் பற்றி, பாக்கியலட்சுமி என்ற பெண், தனது சமூக வலைதள பக்கத்தில் எழுதியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரிய அளவில் வெடித்தது. நடந்த சம்பவம் குறித்து பாக்கியலட்சுமி, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அப்பெண்ணின் கணவர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். நடந்த கொடூரங்களை அவர்கள் விவரித்தனர். 

"பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து, புகார் கொடுக்கச் சென்றபோது, போலீசார் கேட்கக் கூடாத வார்த்தைகளைப் பயன்படுத்தினர். போலீசாரின் தொடர் மிரட்டல் காரணமாக என்னுடையே புகாரை  திரும்ப பெற்றேன்" என கூறியுள்ளார். அந்தக் கொடுமை நடந்த நேரத்துக்குப் பிறகு தனது  கணவர் தன்னை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜெயந்தன், பினேஷ், ஜினேஷ் மற்றும் சிபி என்கிற 4 பேர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார். கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில்  இருப்பதால், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது போலீசார்  நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

இந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிகப்பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களிடம் பேச முயன்றபோது, "அந்த விவகாரம் குறித்து விசாரித்துக் கொண்டிருக்கிறோம். பிறகு  பேசுகிறோம்" என்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மத்தியக் குழு உறுப்பினரும், பெண்ணியவாதியுமான வாசுகியிடம் பேசினோம். "அந்த சம்பவம் தொடர்பாக விரிவான விவரம் தெரியவில்லை. கேரளாவில் உள்ள கட்சியின் தலைமையிடம் விசாரித்துவிட்டு, பிறகு அழைக்கிறேன் " என்றார்.

அரசியல் தலையீட்டால் நீதி கிடைப்பதில்லை !

காவல்துறையின் செயல்பாடுகளால்  பெரும்பாலானோர் புகார்களை காவல்நிலையத்துக்கு கொண்டு செல்லவே  பொதுமக்கள் பயப்படுவதாக பொதுவான கருத்து உள்ள நிலையில், கேரளாவில் புகார் கொடுக்கச் சென்ற பெண்ணை போலீசார் நடத்திய விதம், அந்தக் கருத்தை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. இதுகுறித்து  சமூக ஆர்வலர் பானுகோம்சிடம் பேசினோம்.

"பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிற பெரும்பாலான பெண்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. குடும்பம், சமூகம் என வெளியே சொல்வதில் பல்வேறு தடைகள் உள்ளன. அதையும் மீறி சொல்லும் பெண்கள், குற்றவாளிகளைக் காட்டிலும் அதிக தண்டனையை அனுபவிக்கும் வகையில் பாதிக்கப்படுகிறார்கள். அதைத்தான் பிரதிபலிக்கிறது கேரள சம்பவம். அரசியல் தலையீடு காரணமாக  இவ்வாறு காவல்துறை செயல்பட்டுள்ளதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதிகிடைக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். இந்த கொடுரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை இதனை மூடி மறைக்கக் கூடாது" என்றார்.

'பிரியங்கா' படத்தில் நாசரின் வக்கிரமான குறுக்குக் கேள்விகளுக்கு, பதில் அளிக்கும் நடிகை ரேவதி, குற்றவாளியின் தாய் மற்றும் தங்கையை ஒப்பிட்டுப் பேசுவார். அதன் பின்னரே நாசரின் வாதங்கள் செல்லுபடியாகமல் போகும்.

அண்மையில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய ஒரு பெண்ணியவாதியின் கருத்துதான்  நினைவுக்கு வருகிறது. "தனது தாயை தாயாகவும் தங்கையை தங்கையாகவும் பார்க்கத் தெரியாதவனுக்கு தோன்றும் வக்கிர எண்ணங்களின் வெளிப்பாடே இதுபோன்ற கொடூர சம்பவங்கள் நடைபெறக் காரணம்" என்றார் .

 - கே. புவனேஸ்வரி 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close