Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒருவர் தற்கொலையில் அரசியல் ஆதாயம் தேடுவது கூடாது : அருண் ஜெட்லி

டெல்லியில் ஜிஎஸ்டி தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய  நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, “ ஜிஎஸ்டி தொடர்பாக 10 முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு,  முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி குறித்த வரைவுகள் அனைத்து மாநில அரசுகளுக்கும் வழங்கப்படும். மாநிலங்கள் ஜிஎஸ்டி பற்றிய முடிவுகளை மறுபரிசீலனை செய்ய நேரம் வழங்கப்படும்.  நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில்  மாநிலங்கள்  மறுபரிசீலனை செய்யப்பட்ட ஜிஎஸ்டி வரைவுகளை திரும்ப  அளிக்க வேண்டும்”, என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒரு பதவி, ஓர் ஓய்வூதியம் திட்டத்தை வலியுறுத்தி முன்னாள் ராணுவ வீரர்  தற்கொலை செய்து கொண்டதை பற்றி கருத்து தெரிவித்த அருண் ஜெட்லி, “ ராம்கிஷனின் தற்கொலைக்கு ஒரேபதவி, ஒரே ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படாதது காரணமல்ல. அவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்படும். OROP திட்டத்துக்கான மொத்த தொகையும் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டது.  வங்கிகள் பெரிய அளவிளான தொகையை பரிவர்த்தனை செய்வதில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளது. விரைவில் வங்கி மட்ட சிக்கல்கள் சரி செய்யப்படும். இந்த தற்கொலையில் காங்கிரஸ் அரசியல் ஆதாயம் தேடுகிறது. காங்கிரஸ் தனது ஆட்சிகாலத்தில் ராணுவத்தினரின் ஓய்வூதிய திட்டத்துக்கு ரூ.500 கோடி மட்டுமே நிதி ஒதுக்கியது. 10 ஆண்டுகால ஆட்சியில் முன்னாள் ராணுவத்தினர் மீது காங்கிரஸ் அனுதாபப்படவில்லை”, என தெரிவித்துள்ளார். 

எடிட்டர் சாய்ஸ்