Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெ. வீடு திரும்புவது இனி அவர் கையில்! - அப்போலோவின் தலைவர் பிரதாப் ரெட்டி

செப்டம்பர் மாதத்தின் ஒரு நள்ளிரவில், திடீரென்று அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. அவருக்கு என்ன நோய்... எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள்... என்னமாதிரியான சிகிச்சை தரப்படுகிறது? உள்ளிட்ட அனைத்துமே கேள்விக்குறியாக இருந்த நிலையில் அவரின் உடல்நிலை பற்றி படிநிலை அறிக்கைகளாக வெளியிட்டு வந்தது அப்போலோ.

தொடக்கத்தில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டார் எனக் கூறப்பட்டாலும், இங்கிலாந்து டாக்டர் அப்போலோவுக்கு வருகை தந்தது, டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களின் வருகை, சிங்கப்பூர் டாக்டர்கள் வந்துபோனது என அனைத்துமே ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பின. வெறும் காய்ச்சலுக்காக நிபுணத்துவம் பெற்ற பல்வேறு மருத்துவர்கள் எதற்கு... என்ற கேள்வி எழுந்தது. முதல்வருக்கு என்ன நோய் என்பதை அப்போலோ தெளிவுபடுத்தவில்லை. ஆனால், என்ன மாதிரியான சிகிச்சைகள் தரப்படுகின்றன என்பதை மட்டும் அப்போலோ தன் அறிக்கைகள் மூலம், அவ்வப்போது தெரிவித்து வந்தது. ஒவ்வோர் அறிக்கைகளும் அப்போலோவின் முதன்மைச் செயல்பாட்டு அதிகாரியின் கையொப்பமிட்டு வெளியிட்டன. ஆனால், கடைசியாக வெளியிடப்பட்ட அறிக்கை, தலைமை மருத்துவ இயக்குநர் கையொப்பம் இட்டிருந்தார்.

இந்த நிலையில் ஜெயலலிதா குணமடைந்து வருகிறார் என்று அப்போலோ மருத்துவ வட்டாரங்களே அதிகாரபூர்வமற்ற செய்திகளாக வெளியிட்டு வந்தன. இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, அப்போலோவின் தலைவர் பிரதாப் ரெட்டியே முதல்வர் பூரணமாக குணமடைந்துவிட்டார் எனத் தெரிவித்திருக்கிறார். அப்போலோவின் மருத்துவக் கையேடு புத்தகத்தை நேற்று வெளியிட்டுப் பேசிய அவர் முதல்வர் உடல்நலம் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எவ்வித தயக்கமோ தடங்கலோ இல்லாமல் பதிலளித்தார்.

அப்போது பேசுகையில், ”முதல்வர் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கிறார். இனிமேல் எப்போது மருத்துவமனையிலிருந்து செல்வார் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். மேலும் அவருக்கு, அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் அவர் மிகவும் திருப்திகரமாக உணருகிறார். இதில் டாக்டர்கள் மட்டுமல்லாமல் நர்ஸ்கள் தொடங்கி பணியாட்கள் வரை அனைவரது பங்குமே குறிப்பிடத்தக்கது. முக்கியமாக இங்கிலாந்து மருத்துவர்கள், டெல்லி மருத்துவர்கள் என அனைவருமே தங்களது முழு உழைப்பையும் அவரது சிகிச்சைக்காக அர்ப்பணித்திருக்கிறார்கள். அவருக்கு அளித்து வரும் மொத்த சிகிச்சை முறையிலும் மிக முக்கியமான சிகிச்சை ஒன்று வெற்றிகரமாக முடிந்துள்ளது. சொல்லப்போனால் உலகின் தலைசிறந்த சிகிச்சைமுறைகள் அனைத்தும் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. கூடவே கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனையும் சேர்ந்து பயனளித்திருக்கிறது. அவர் விரைவிலேயே உங்களை எல்லாம் வந்து சந்திப்பார்” என்றார்.

'முதல்வர் எப்போது மருத்துவமனையிலிருந்து வீடுதிரும்புவார்' என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், “அவருடைய இயல்பு உங்கள் அனைவருக்குமே நன்றாகத் தெரியும். அவர் தன் உடல்நிலையை நல்ல முறையில் புரிந்துகொண்டுள்ளார். விரைவிலேயே ‘நான் எப்போது வீடு திரும்பலாம்?’ என்று அவர் என்னிடம் கேட்பார் என எதிர்பார்க்கிறேன். சாதாரண மருத்துவ வார்டுக்குச் செல்வதாகட்டும் அல்லது தன் வீட்டுக்குத் திரும்புவதாகட்டும்... இனி எந்த முடிவும் அவர் கையில்தான் இருக்கிறது. விரைவில் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்பார்” என்று சிரித்தபடியே பதிலளித்தார்.

இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்?

- ஐஷ்வர்யா

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ