Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பேச்சுவார்தையில் உடன்பாடு: பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு


பெட்ரோல், டீசல் விற்பனைக்கான கமிஷன் தொகையை உயர்த்தக்கோரி நாடு முழுவதும் பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி, பெட்ரோலுக்கு தற்போது வழங்கப்படும் கமிஷன் தொகை ரூ.2.34 காசுகளுக்கு மேலாக, ரூ.1.20 காசுகள் தர வேண்டும். டீசலுக்கு தற்போது ரூ.1.52 காசுகள் கமிஷன் தொகை வழங்கப்படுகிறது. இதனை 77 காசுகள் உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


இந்நிலையில் மும்பையில் இன்று பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பெட்ரோலுக்கு லிட்டருக்கு 13 பைசாவும், டீசலுக்கு 10 பைசாவும் உயர்த்தி தருவதாக எண்ணெய் நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன. மேலும் ஆண்டுக்கு இரண்டு முறை கமிஷன் தொகையை உயர்த்துவது குறித்தும் பரிசீலிப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன. இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close