Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடக்காது: இலங்கை அமைச்சர்கள் உறுதி

தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து இந்திய, இலங்கை அமைச்சர்கள் கலந்து கொண்ட 4-ம் கட்ட பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றது. இலங்கை அமைச்சர்கள் மங்கள சமரவீரா, மகிந்த அமரவீரா பங்கேற்றனர்.  மத்திய அரசு சார்பில் சுஷ்மா ஸ்வராஜ், ராதாமோகன் சிங், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.


இதில் தமிழக மீனவர்களின் அனைத்து விசைப் படகுகளையும் திரும்பித் தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்துக்கு பின்னர், பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மீனவர் பிரச்னையில் நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  தமிழக மீனவர்கள் பிரச்னையில் தீர்வு காண மோடி ஆர்வமாக உள்ளார்.  மேலும் மீனவர் பிரச்னைக்காக அமைக்கப்பட்டுள்ள கூட்டுக்குழு கூட்டம் அடுத்த மாதம் நடத்தப்படும்". என்றார்.

இந்த கூட்டத்தில் பேசிய இலங்கை அமைச்சர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது இனி தாக்குதல் நடத்தப்படாது என்று உறுதியளித்துள்ளனர். மேலும் படகுகளை திருப்பி அளிப்பது குறித்து கூட்டுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இலங்கை அதிபர் சிறிசேனா நாளை இந்தியா வருகிறார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close