Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தானியங்கி கார்கள் இந்தியாவுக்கு ஒத்துவராது'- மாருதி நிறுவனத் தலைவர்

உலகின் பணக்கார நாடுகளில், தானியங்கி கார்கள் ஆங்காங்கே இயக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில், அமெரிக்காவில் 'உபேர்' நிறுவனம் தானியங்கி 'ட்ரக்' ஒன்றை இயக்கி, உரிய இடத்தில் பொருளை டெலிவரி செய்தது.


இப்படி உலகில் உள்ள முன்னணி வாகனம் தயாரிப்பு நிறுவனங்கள் 'ஆட்டோமேடிக் வாகனங்களை' நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேலையில், இந்தியாவில் கார்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் மாருதி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா, தானியங்கி கார்கள் இந்தியாவுக்கு ஒத்துவராது என்று கூறியுள்ளார்.


அவர் இதுபற்றி, 'இங்கு ஆட்டோமேடிக் கார் தொழில்நுட்பம் சரிபட்டு வராது, காரணம் யாருமே இங்கு சாலை விதிகளை பின்பற்றுவதில்லை. நிலைமை இப்படி இருக்கையில், எதை வைத்து தொழில்நுட்பத்தை வளர்த்தெடுப்பது. வாகன ஓட்டிகளின் செயலை யாராலும் இங்கு கணிக்க முடியாது.' என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ