Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெடி விபத்திலிருந்து தப்பித்த ராணுவ நாய்

ஒடிசா, ராய்கார் மாவட்டத்தில், வெடி இருப்பதாக தகவல் கிடைத்ததன் பேரில் சி.ஆர்.பி.எஃப் மோப்ப நாய் உதவியுடன் அதை கண்டுபிடிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தது. பணியில் நாய் ஒன்று மோப்பம் பிடித்துக் கொண்டிருக்கும்போதே, வெடி வெடித்துவிட்டது. இதனால், அந்த நொடியில் மோப்பம் பிடித்த நாய் இறந்துவிட்டது என்று நினைத்த நிலையில், அதிர்ஷ்டவசமாக அது சில காயங்களுடன் உயிர் பிழைத்தது. இந்த வெடியை வைத்தது நக்சல் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. வெடி விபத்தில் அடிபட்ட நாய், கடந்த ஐந்து வருடங்களாக சி.ஆர்.பி.எஃப்-ல் பணிபுரிந்து வருகிறது. இந்தச் சம்பவம் அனைத்தும் படம் பிடிக்கப்பட்டு ஏ.என்.ஐ ஊடகத்தால் பகிரப்பட்டுள்ளது.

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ