Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிலோ கணக்கில் நகை திருடிய 9 பேர் கைது!

 

தமிழகம் மற்றும் கர்நாடக பகுதிகளில் கிலோ கணக்கில் நகைகள் திருடியதாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூர், வேலூர், வாணியம்பாடி ஆகிய பகுதிகளில் கிலோ கணக்கில் நகைகளைத் திருடியதாக பெங்களூர் காலஸ்பாளையம் போலீசார் நான்கு நகை கடை உரிமையாளர் உள்பட 9 பேரை கைது செய்துள்ளனர்.

கடந்த ஜுலை மாதம் 12 ம் தேதி அன்று பெங்களூரில் வசிக்கும் பால முரளிகிருஷ்ணா என்பவரின் வீட்டில் நகை மற்றும் பணம் திருட்டுப் போனதாக காலஸ்பாளையம் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ஆலங்காயம், நாயக்கணுர் மலை பகுதியை சேர்ந்த முருகன், சங்கர், ராஜேந்திரன் ஆகியோரைக் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், பெங்களூரு மட்டுமல்லாது வேலூர், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் இவர்கள் திருடியதாகவும், அப்படி திருடி கொண்டு வரும் நகைகளை, ஆலங்காயம் பகுதியில் உள்ள நகைகடையில் லதா, சுமதி என்பவர்கள் விற்று பணம் பெற்றுக்கொள்வதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, நகைக்கடை உரிமையாளரான பவர்களால் சேட்டு, கமல், ஸ்ரீதர், சரவணன் என மொத்தம் 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 9 பேரிடமிருந்து சுமார் ஒரு கிலோ மதிப்பிலான, 102 சவரம் தங்கம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இவர்கள் அனைவரும் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ