Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராணுவ நடவடிக்கைகளை தொலைக்காட்சியில் வெளியிடுவது குற்றம்: வெங்கையா நாயுடு

இந்திய ராணுவ நடவடிக்கைகளைத் தொலைக்காட்சியில் வெளியிடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் ராணுவ நடவடிக்கைகள் பற்றி விவாதிப்பதும், அது தொடர்பான ஆதாரங்களை தொலைக்காட்சியில் வெளியிடுவதும் நமது நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்தும் செயல் என்று கடுமையாக குற்றம் சாட்டினார்.

முக்கியமாக, நமது நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பல விதிகளை மீறியதால்தான் என்.டி.டி.வி. ஒளிபரப்புக்கு ஒரு நாள் தடை விதிக்கப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார். 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close