Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏழாவது நாளாக தலைநகரை மூடியுள்ள பனிப்புகை

டெல்லியில் ஏழாவது நாளாக இன்றும் கடும் பனிமூட்டம் நிலவுவதால், டெல்லி முதல்வர்  கெஜ்ரிவால் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். 

டெல்லியில் தீபாவளி பண்டிகை முடிந்ததில் இருந்தே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. காற்று மாசு கடுமையான அளவு உயர்ந்துள்ளதே இந்த பனிமூட்டத்திற்கு காரணம் என சுற்றுசூழல் வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர். மேலும் கட்டிடங்கள், வாகனங்களை பனிப்புகை சூழ்ந்து கொண்டதால் சாலை விபத்து ஏற்படுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  டெல்லி மக்கள் பல்வேறு உடல்நல குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி வருகின்றனர். இந்நிலையில்  டெல்லியில் இன்று காற்று மாசு தொடர்பாக அவசர அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ