Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரிசர்வ் வங்கி ஆளுநர் நியமனம் தொடர்பான விவரங்களை வெளியிட மறுப்பு

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக உர்ஜித் படேல் நியமிக்கப்பட்டது தொடர்பான விவரங்களை வெளியிட மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் ரிசர்வ் வங்கியின் ஆளுநர்  ரகுராம் ராஜனின் பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, உர்ஜித் படேல் ஆளுநராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து  ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் விவரங்களும், உர்ஜித் பட்டேல் தேர்வானது தொடர்பான விவரங்களையும் வெளியிடுமாறு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதலளித்து மத்திய அமைச்சரவை செயலகம், ரிசர்வ் வங்கி ஆளுநர் தேர்ந்தெடுக்கப்பட்ட முறை தொடர்பான விவரங்களை வெளியிட முடியாது என்றும் அவை அமைச்சரவை ஆவணங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்