Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

160 கிமீ வேகத்தில் டெல்லி ரயில்கள்..விரைவில்..!

டெல்லி-ஹவுரா மற்றும் டெல்லி-மும்பை வழியாக செல்லும் ரயில்களின் வேகத்தை கூட்டி, ரயில்களை மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்க வைக்கும் முயற்சியில் இந்திய ரயில்வே துறை தீவிரமாக இறங்கியுள்ளது.

டெல்லி-மும்பை வழியாக செல்லும் ரயில்களின் வேகத்தைக் கூட்டுவதன் மூலம், பயண நேரம் குறைந்து, கூடுதல் ரயில்களை இயக்க முடியும் என்கிறது ரயில்வே துறை. மேலும் இதனால் ரயில் பயணிகள் சிரமப்படாமல் பயணிக்க முடியும். இத்திட்டத்துக்கு 10,000 கோடி ரூபாய் செலவாகும் என  மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 

சில மாதங்கள் முன்பு மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்  அதிவேக கதிமான் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை வெற்றிகரமாக இயக்கியது குறிப்பிடத்தக்கது.  
 

எடிட்டர் சாய்ஸ்