Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீவிரமடையும் டெல்லி காற்று மாசு விவகாரம்

டெல்லியில் காற்று மாசு தரம் மோசமான நிலையை எட்டியதால், அங்கு கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. காற்று மாசை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்க இன்று டெல்லி முதல்வர்  உத்தரவின் பேரில் அவசர அமைச்சரவை கூட்டம் கூடியது. 

அமைச்சரவை கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால், ‘ இன்னும் மூன்று நாட்களுக்கு பள்ளிகள் மூடப்படும். டெல்லியில் நடைபெறும் அனைத்து கட்டுமானப் பணிகளும் 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும். டெல்லி நிலக்கரி சுரங்க எரிபொருள் மின் நிலையம் பத்து நாட்களுக்கு மூடப்படும்’ என தெரிவித்துள்ளார்.



இந்நிலையில் டெல்லி மக்கள்  ஜந்தர் மந்தர் பகுதியில் ஒன்று திரண்டு காற்று மாசு கட்டுப்படுத்த மாநில மற்றும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி  இன்று காலை பேரணி நடத்தினர். 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ