Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுஷ்மா உதவியால் இந்தியா வந்தடைந்த பாகிஸ்தான் மணமகள்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த நரேஷ் தவானி என்பவருக்கும் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி பகுதியைச் சேர்ந்த பிரியா பச்சானிக்கும் பல சிக்கல்களுக்கு பிறகு இன்று திருமணம் நடைபெற உள்ளது.

உரி தாக்குதல், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என இந்தியா -பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வந்த நிலையில் பாகிஸ்தானில் வசித்த மணமகள் பிரியா பச்சானிக்கு இந்தியா வர விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே மணமகன் நரேஷ் தவானி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் ட்விட்டர் மூலம் உதவி கேட்டுள்ளார். சுஷ்மா தலையிட்டு பிரியா பச்சானி குடும்பத்தினருக்கு விசா கிடைக்க வழிவகுத்துள்ளார்.

இது குறித்து நரேஷ் தவானி, ”என் கோரிக்கைக்கு தாமதிக்காமல் பதிலளித்து  35 பேருக்கும் விசா கிடைக்க உதவி செய்த அமைச்சர் சுஷ்மா அவர்களுக்கு மிக்க நன்றி” என தெரிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ