Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்னமா இப்படி பண்றீங்களேமா? சர்ச்சையில் நடிகை

ஜீ-தமிழ் தொலைக்காட்சியில் வரும் சொல்வதெல்லாம் உண்மை போலேவே, தெலுங்கு ஜீ டி.வி யிலும் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. லஷ்மி ராமகிருஷ்ணனைப் போல அங்கு, நடிகை கீதா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் இவர்கள் நிகழ்ச்சியின் எப்பிஸோடு ஒன்றில் ஒரு காதல் ஜோடியை கீதா கடுமையாக விமர்சித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் அந்த பெண் காதலித்தவர் திருநங்கை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து அவர்களை கீதா சகட்டுமேனிக்கு விமர்சித்துள்ளார். குறிப்பாக ஒரு பெண் திருநங்கையை திருமணம் செய்வது மேற்கத்திய கலாச்சாரம் நம் ஊருக்கு இது சரி வராது என்று சாடியுள்ளார். மேலும் அந்த திருநங்கையை பார்த்து நீ பேன்ட், ஷர்ட் போட்டால் ஆண் ஆகி விடுவாயா? உனது கால்களை உடைத்து விடுவேன் என்று கூறியதாக தெரிகிறது.  

மேலும், அந்த பெண்ணின் பெற்றோரை அழைத்து உங்களது பெண்ணுக்கு விரைவில் வேறு ஒருவரை திருமணம் செய்து வையுங்கள் என்றும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. இந்த பிரச்னையால் கீதாவுக்கு கடுமையான கண்டனங்களும் எழுந்து வருகிறது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close