Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சீனா எச்சரிக்கை: கண்டுகொள்ளாத இந்தியா

மத்திய லடாக்கில், டெம்சொக் கிராமப் பகுதியில் நடந்து வந்த  நீர்ப்பாசனக் கால்வாய் கட்டுமானப் பணியை  இந்திய ராணுவ பொறியாளர்கள் வெற்றிகரமாக  நிறைவு செய்துள்ளனர். 

கடந்த புதன்கிழமை, எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (LAC) நுழைந்த 55  சீன ராணுவ வீரர்கள்,  டெம்சொக் பகுதியில்  நடந்து வந்த நீர்ப்பாசனக் குழாய்கள்  நடும் பணிகளை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனை அறிந்த எல்லைப் பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. 

கட்டுமான பணிகளுக்கு இருதரப்பு ஒப்புதல் பெற வேண்டும் என சீன ராணுவத்தினர் எச்சரித்துள்ளனர். பின்னர் சீன ராணுவம் இந்திய பகுதிக்குள் முன்னேறாத படி,  இந்திய ராணுவ மற்றும் இந்தோ திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் 70 பேர் அரண் அமைத்து நின்றுள்ளனர். இந்நிலையில் சீன வீரர்களின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத ராணுவ பொறியாளர்கள், பணியில் ஈடுபட்டு,   ஒரு கிமீ தூரத்துக்கு அந்த பகுதியில் நீர்பாசனக் குழாய் நடும் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ