Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜே.என்.யூ மாணவர் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார் : பிரணாப் உறுதி

மூன்று வாரங்களுக்கு முன்னர் காணாமல் போன டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் நஜிப் அகமதை கண்டுபிடிக்க, நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர் நஜீப் அகமது கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் காணவில்லை. நஜிப் காணாமல் போனதற்கும் குறிப்பிட்ட ஹிந்துத்துவ அமைப்பிற்கும் தொடர்புள்ளதாகவும், அவரை கண்டுபிடிக்க வலியுறுத்தியும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நஜிப் காணாமல் போன விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று  பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார்.

நஜிப்பை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு மோடி அரசை வலியுறுத்த வேண்டும் என பிரணாப் முகர்ஜியிடம் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தார். தனது கோரிக்கையை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டதாகவும், நஜிப் தொடர்பான விசாரணை துரிதப்படுத்தப்படும் என  அவர் உறுதியளித்ததாகவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close