Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜம்மு-காஷ்மீர் மாநில கல்லூரி மாணவிகளுக்கு பாதி விலையில் ஸ்கூட்டி!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 'முதல்வர் ஸ்கூட்டி திட்டத்தின்' கீழ் மானிய விலையில் 300 மாணவிகளுக்கு அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி ஸ்கூட்டியை வழங்கியுள்ளார். ஒரு ஸ்கூட்டியின் விலையில் 50% மானியம் பெற்று ஸ்கூட்டியைப் பெற்றுக் கொள்ளலாம்.  காந்தி நகரில் அமைந்துள்ள அரசு பெண்கள் கல்லூரியில் உள்ள பெண்களுக்கு 150 ஸ்கூட்டிகளை 50% மானியத்தில் கொடுத்தப் பின் பேசிய அவர், 'மாணவிகளின் எதிர்காலத்துக்கான சேமிப்பாக நாம் கொடுக்க வேண்டியது கல்வி மட்டுமே. அதன் மூலமே மாணவிகள் தன்னிறைவு பெற முடியும். குடும்பத் தலைவியாக, அன்பை காட்டுபவளாக இருப்பவளே பெண். அவள் சுதந்திரமாக நடமாடினாலே மாநிலம் பெருமையடையும்.'என்றார் மெகபூபா முப்தி.

இந்த ஸ்கூட்டியை, 65% மதிப்பெண்களை கொண்டு நான்கு லட்சத்துக்கு குறைவான குடும்ப ஊதியம் பெறும் மாணவிகளும் மட்டுமே பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.   

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close