Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’அனைத்து ஆர்.டி.ஐ மனுக்களுக்கும் பதிலளிக்கப்படும்’ - ராஜ்நாத்சிங்

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் வரும் அனைத்து மனுக்களுக்கும் ஆர்.டி.ஐ அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். 

11 ஆவது மத்திய தகவல் ஆணைய மாநாட்டை துவக்கி வைத்து பேசிய ராஜ்நாத் சிங், “ மத்திய அரசின் செயல்பாடுகளில்  வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளது. மக்களின் அனைத்து விதமான ஆர்.டி.ஐ மனுக்களுக்கும் அதிகாரிகள் பதிலளித்து வருகின்றனர். அண்மையில் இந்தியாவில் வேற்றுகிரகவாசிகள் படையெடுத்தால் இந்திய பாதுகாப்புத் துறை என்ன செய்யும் ? போன்ற கேள்விகளுக்கு கூடப் பொறுமையாக ஆர்.டி.ஐ அதிகாரிகள் பதிலளித்தது குறிப்பிடத்தக்கது”, என தெரிவித்துள்ளார். 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ