Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விவசாயிகள் தற்கொலைக்கு மத்திய அரசே காரணம்

 

திருவாரூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், விவசாயிகள் தற்கொலைக்கு மத்திய அரசு பொறுப்பேற்று உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் சங்க தலைவர் சேதுராமன் தெரிவித்துள்ளார்.

மேலும், விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை சார்பில் தற்கொலையை தடுக்கும் வகையில் உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ