Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யாகம் மூலம் டெல்லி மாசை கட்டுப்படுத்த களமிறங்கும் ’என்விராய்ன்மென்ட் பாபாஜி’

டெல்லியில் காற்று மாசு கடுமையாக உயர்ந்துள்ளதால், கடந்த சில நாட்களாக பனிப்புகை, புழுதியால் டெல்லி சூழப்பட்டுள்ளது, இந்நிலையில் யாகம் மூலம் டெல்லி காற்று மாசின் அளவை கட்டுப்படுத்தப் போவதாக 'சுற்றுச் சூழல் பாபா' (environment baba) என்று அழைக்கப்படும்  ஆன்மீக குரு ஒருவர் அறிவித்துள்ளார். 

பாபா அருணகிரி மகாராஜ் என்னும் இந்த சுற்றுச் சூழல் பாபா, “ இமயமலையில் உள்ள பிரத்யேக  மருத்துவ மூலிகை இலைகள் யாகத் தீயில் போடப்படும். இந்த மூலிகை மூலம் டெல்லியின் காற்று மாசு கட்டுப்படுத்தப்படும். இதன் மூலம் 33 கோடி தெய்வங்களும் மகிழ்ச்சியடைவார்கள். சுற்றுசூழலும் தூய்மை ஆகும்” என தெரிவித்துள்ளார். யாகம் குறித்த தகவல்களை Environment Babaji என்னும் ட்விட்டர் மற்றும் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ