Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிதி வழங்க அனுமதியுங்கள்..! உச்ச நீதிமன்றத்தை நாடியது பிசிசிஐ

ராஜ்கோட்டில் நாளை தொடங்கவிருக்கும் இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடருக்கு  நிதி வழங்க அனுமதிக்க வேண்டும் என்று பிசிசிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதி வழங்காவிட்டால் தொடர் ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரிய  நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் செய்வதற்காக உச்ச நீதிமன்றம் சார்பில்  ஆர்.எம்.லோதா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.  இந்த கமிட்டி பல பரிந்துரைகள் செய்தது. அதற்கு ஒப்புதல் அளித்த நீதிமன்றம் விரைவில் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி வருகிறது.  

லோதா பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் வரை மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு நிதி வழங்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் நாளை நடைபெற உள்ள இந்தியா-இங்கிலாந்து போட்டிக்கு நிதி வழங்க அனுமதிக்குமாறு பிசிசிஐ மனு தாக்கல் செய்துள்ளது.  அதேசமயம் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அவமதிப்பதாக பிசிசிஐயின் மனுவுக்கு லோதா கமிட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

எடிட்டர் சாய்ஸ்