Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பழங்குடி நபர் கொலையில் டெல்லி பேராசிரியர்கள் 10 பேர் மீது எஃப்.ஐ.ஆர்

சத்தீஸ்கர் மாநிலம்,  நமா கிராமத்தைச்  சேர்ந்த பழங்குடி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் நந்தினி சுந்தர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் அர்ச்சனா பிரசாத் உள்ளிட்ட பத்து பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 4-ம் தேதி சாம்நாத் பாகெல் என்ற பழங்குடி நபரை நக்சல்கள் சிலர் படுகொலை செய்துள்ளனர். பாகெல் நக்சல்களுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வந்ததாகவும், நக்சல்களை எதிர்க்க வேண்டாம் என நந்தினி சுந்தர் உட்பட பலர் மிரட்டி வந்ததாகவும் பாகெலின் மனைவி காவல்துறையில் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய காவல்துறை இரண்டு பேராசிரியர்கள் உட்பட பத்து பேர் மீது கடந்த சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ