Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் பலி

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் நவ்ஷெரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஜம்மு- காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்தி வரும் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால், அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் ஜம்மு- காஷ்மீரின் நவ்ஷெரா பகுதியின் ரஜோரி மாவட்டத்தில் இன்றும் இந்தியா- பாகிஸ்தான் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. இதில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட  தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த சண்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ