Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவில் உப்பால் 23 சதவீத உயிரிழப்புகள்

உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்ததை விட இந்தியாவில் 119 சதவீதம் அதிகமாக உப்பு பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில், உலக சுகாதார நிறுவனம், ஒரு மனிதர் சராசரியாக ஒரு நாளைக்கு 5 கிராம் உப்பு பயன்படுத்தலாம் என்று தெரிவித்திருந்தது. ஆனால் இந்தியாவில் சராசரியாக ஒருவர், நாளொன்றுக்கு 10.98 கிராம் உப்பை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.


இதனால் ரத்த கொதிப்பு, இதய பிரச்னைகள் அதிகரிப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் கடந்த 2010 முதல் 2013 வரை இதய பாதிப்புகளால் 23 சதவீத உயிரிழப்புகள்  (மொத்த உயிரிழப்பில்) ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், திரிபுரா, குஜராத் மாநிலங்கள் குறைந்த பட்சமாக சராசரியாக நபர் ஒருவர் 6.7 கிராம் உப்பை பயன்படுத்துகின்றன. நாட்டில் அதிகபட்சமாக திரிபுராவில் சராசரியாக ஒரு நபர் 13.14  கிராம் உப்பை ஒரு நாளுக்கு பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close