Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெல்லியில் ஹெலிகாப்டர்கள் மூலம் மழை : பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

டெல்லியில் காற்று மாசு மிகக் கடுமையான அளவை எட்டியுள்ளதைத் தொடர்ந்து, டெல்லி அரசு பள்ளிகளுக்கு விடுமுறை, கட்டுமானப் பணிகளுக்கு தடை போன்ற உத்தரவுகளை பிறப்பித்தது. இந்நிலையில் டெல்லி மாசு தொடர்பாக விசாரணை நடத்தியுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் (National Green Tribunal), பின்வரும் நடவடிக்கைகளை பரிந்துரை செய்துள்ளது :

* டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு ஒரு வாரம் தடை
* விவசாய கழிவுகளை எரிக்காமல் அப்புறப்படுத்த பஞ்சாப் அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயக் கழிவுகளை எரிக்காமல் இருக்க விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும்.
* வயல்வெளிகளில் விவசாயக் கழிவுகளை எரிப்போர் மீது பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* சாலைகளில் தண்ணீர் தெளிக்க வேண்டும் 
* ஹெலிகாப்டர் மூலம் செயற்கை மழை பொழிய செய்து தூசு பரவுவதை தடுக்க முயற்சி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ