Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் இனி செல்லாது!




நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்துள்ளார்.


2005 க்கு முன்பு வரை அச்சிட்ட நோட்டுக்கள்

2005 க்கு முன்பு வரை அச்சிட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை வங்கியில் மாற்ற டிசம்பர் 30 ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை வங்கிகள் விடுமுறை

வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை வரும் 10-ம் தேதி முதல் மாற்றிக்கொள்ளவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக, நாளை ஒரு நாள் நாடு முழுவதும் உள்ள வங்கிகள், ஏ.டி.எம். இயந்திரங்கள் மற்றும் தபால் நிலையங்கள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை மறுநாள் ஏ.டி.எம். இயந்திரங்கள் மட்டும் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் நாடு முழுவதும் பண பரிவர்த்தனைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

50 நாட்கள் அவகாசம்

ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ள பொதுமக்களுக்கு 50 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் ரூ.5 ஆயிரம் வரை எந்த அடையாள அட்டையும் இன்றி பணம் மாற்றிக்கொள்ள முடியும் என்றும், ரூ.5 ஆயிரத்துக்கு மேல் வங்கியில் பணம் மாற்றினால், அடையாள அட்டை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கியில் ஏற்றுக்கொள்ளப்படாத நோட்டுக்களை, ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பணத்தை மாற்றுவதற்கு வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம் மாற்ற சிறப்பு சலுகை

சில தவிர்க்க முடியாத காரணங்களால், பணத்தை மாற்ற முடியாதவர்கள், 2017 ஆண்டு மார்ச் 31 ம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என்றும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய நோட்டுக்கள் அறிமுகம்



மேலும், நாளை மறுநாள் முதல் புதிய வடிவில் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் மோடி அறிவித்துள்ளார். இதன் மூலம் கள்ள நோட்டுக்கள் அச்சடிக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.



அரசு மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், பெட்ரோல் பங்க்குகள், இடுகாடுகள் ஆகிய இடங்களில் மட்டும் வரும் நவம்பர் 11ம் தேதி வரை ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும், 2005 க்கு முன்பு வரை அச்சிட்ட நோட்டுக்களை மட்டும் மாற்றிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ள சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மோடி வருத்தம்

குடியரசுத் தலைவரை சந்தித்து, இது தொடர்பாக விளக்கம் அளிக்க உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். நாட்டில் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் விதமாக, ஊழலுக்கு எதிரான போராக இது கருதப்படுவதாகவும் பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். இதனால் மக்களுக்கு ஏற்படும் சிரமத்துக்கு வருந்துகிறேன் என்றும் பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஏடிஎம்களில் குவியும் மக்கள்!

நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்துள்ளார். ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் வைத்திருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை வங்கியில் மாற்ற டிசம்பர் 30 ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.தவிர்க்க முடியாத காரணங்களால், மாற்ற இயலாதவர்கள் மார்ச் 31-ம் தேதி வரை அடையாள அட்டையைப் பயன்படுத்தி மாற்றிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 

நாளை காலை முதல் 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்பதால், ஏடிஎம்களில் மக்கள் படையெடுக்கத் துவங்கி இருக்கிறார்கள்.

ரிசர்வ் வங்கி ஒப்புதல்

கள்ள நோட்டை ஒழிக்கும் விதமாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த அதிரடியான புதிய அறிவிப்புக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் விளக்கம்

போதிய எண்ணிக்கையில் நோட்டுகள் தயாராக இருப்பதாக ரிசர் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார். புதிய நோட்டுகள் அனைத்தும் 10-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொருளாதார விவகாரத்துறை செயலாளர் விளக்கம்

புதிய நோட்டுகளை வங்கிகளுக்கு கொண்டு சேர்க்கவே நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகப் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்த தாஸ் விளக்கம் அளித்துள்ளார். இதனால், நாளை ஒரு நாள் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். இயந்திரங்கள் செயல்படாது என்றும் அவர் கூறியுள்ளார். நாளை மறுநாள் முதல் புதிய அம்சங்களுடன் புதிய 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

பிரதமர் மோடியின் இந்த செயல்பாடு நாட்டு நலனுக்கு மிகப்பெரிய அளவில் உதவும் என்றும், ஏழை-எளிய மக்களுக்கு பெரிதும் பயன் உள்ளதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவத்தார். 

கள்ள நோட்டு, கறுப்பு பணம் அதிகரித்ததால், இந்த துணிச்சலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் வளர்ச்சிக்கு இந்த நடவடிக்கை அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். குறுகிய கால அவகாசம் தந்தால்தான் கருப்பு பணத்தை மாற்ற முடியாது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த நடவடிக்கை தொடர்பாக ஏற்ககெனவே மாநில அரசுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், இந்த அறிவிப்பு பற்றி மத்திய அரசில் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சந்தேகங்களை தீர்க்க புதிய நம்பர்

இந்நிலையில் பண பரிவர்த்தனை மற்றும் பொது மக்களின் சந்தேகங்களை தீர்க்க மக்கள் 011-23093230 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு!

கள்ள நோட்டை ஒழிக்கும் விதமாக பிரதமர் மோடி கொண்டுவந்துள்ள புதிய திட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், " வாழ்த்துகள் மோடி. புதிய இந்தியா பிறந்துள்ளது" என குறிப்பிட்டு இருக்கிறார்.

குடியரசுத் தலைவர் பாராட்டு

பிரதமர் மோடியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், மோடியின் இந்த உறுதியான நடவடிக்கையை, பாராட்டுவதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

பிரதமர் மோடியின் இந்த திடீர் அறிவிப்பால், ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

மேலும், புதிய அறிவிப்பைக் கையாள நமது நாட்டின் வங்கித்துறை தயாராக உள்ளதா என்றும், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்துவது சரியானதா என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

மம்தா பானர்ஜி எதிர்ப்பு

பிரதமர் மோடி, 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்பதை அறிவித்துள்ளதை, உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டரில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

100 ரூபாய் நோட்டுக்குத் தட்டுப்பாடு

நாடு முழுவதும் 100 ரூபாய் நோட்டுகளுக்க கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள், தங்களிடம் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களைப் பல இடங்களில் சில்லறையாக மாற்றி வருகின்றனர். இதனால், இந்தியா முழுவதும் 100 ரூபாய் நோட்டுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

 

- ரா.அருள் வளன் அரசு

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close