Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடியின் முடிவுக்கு தொழிலதிபர்கள் என்ன சொல்கிறார்கள்

 

நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்துள்ளார்.

இது பற்றி தொழிலதிபர்களிடம் கருத்து கேட்டபோது, 

கவின்கேர் சி.கே.ரங்கநாதன்:

இது ஒரு கிரேட் மூவ். இதை வரவேற்கிறேன். ஒரே இரவில் இதன் மூலம் கறுப்புப் பணம் ஒழிந்துவிடும்! தீவிரவாதிகள் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியது போல, கறுப்புப் பண பேர்வழிகள் மீது இந்த தாக்குதலை தொடுத்திருக்கிறார்கள்''

 

கொடிசீயா இளங்கோ:

''எதிர்காலத்துக்கு மிகவும் தேவையான நடவடிக்கை இது. இதை உறுதியாக அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் கறுப்புப்பணம் ஒழியும்.  இதனால் சாதாரண மக்கள் பாதிப்படயக் கூடாது. அவர்களின் உடனடி செலவுக்கு பணத்தை செலவழிக்க வழிவகை செய்து தரவேண்டும்!''

 

வரவேற்கத்தக்க முடிவு. மோடிக்கு நிச்சயமாக சல்யூட் அடிக்கலாம். ஆனால் இந்த ஒரு நடவடிக்கை மூலமே கறுப்புப் பணத்தை ஒழித்துவிட முடியாது! நான்கு கதவில் ஒன்றைத்தான் மோடி மூடி இருக்கிறார்! மற்ற கதவுகள்  அப்படியே இருக்கிறது! இதன் மூலம் கறுப்பு பண பேர்வழிகள் உள்ளே வரமாட்டார்கள் என்று என்ன  நிச்சயம்? ஏற்கெனவே தவறு செய்தவர்களை நாம் தண்டிக்கவில்லையே! ஊழல் அரசியல்வாதிகளை  தண்டித்தால் தான் எல்லோருக்கும் பயம் வரும்'' என்றார் சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர்.

எடிட்டர் சாய்ஸ்