Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதிய ரூபாய் நோட்டுகள் கரன்ஸி செஸ்டிற்கு வந்துவிட்டது....!

ரூபாய் 500,1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது பல விதமான குழப்பங்களையும், கேள்விகளையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.   அதில் முக்கியமான கேள்வி ஒன்று, இவ்வளவு தொகயை மாற்றிக் கொடுக்க வங்கிகளிடம் பணம் உள்ளதா...? என்பது

இது தொடர்பாக நம்மிடம் பேசிய வங்கி அதிகாரி ஒருவர், “சில தினங்களுக்கு  முன்பே வங்கிகளுக்கு உள்ள கரன்ஸி செஸ்டிற்கு புதிய ரூபாய் நோட்டுகள் வந்துவிட்டது.  ஆனால், அது இன்னும் வங்கி கிளைகளுக்கு வந்து சேரவில்லை... அரசு நாளை விடுமுறை அறிவித்திருப்பதை வைத்து பார்க்கும் போது, நாளை வங்கிகளுக்கு வந்து சேரும் என்று நினைக்கிறோம். மக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை” என்றார்.

கரன்ஸி செஸ்ட் என்றால் என்ன...?

இதை சுருங்கச் சொன்னால், வங்களின் கருவூலம் எனலாம். வங்கிகள் பணத்தை இங்கு தான் ஸ்டோர் செய்து வைத்திருக்கும். இது நேரடியாக ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் இயங்கும். பணத்தை கையாள்வது மட்டும் தான் இதன் பணி. அனைத்து வங்கிகளுக்கும் கரன்ஸி செஸ்ட் இருக்கும். இங்கிருந்து தான் வங்கி கிளைகளுக்கு தேவையான பணம் செல்லும்.

எடிட்டர் சாய்ஸ்