Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய அரசுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு!

காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி  எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் இந்த திடீர் அறிவிப்பால், ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

மேலும், புதிய அறிவிப்பைக் கையாள நமது நாட்டின் வங்கித்துறை தயாராக உள்ளதா என்றும், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்துவது சரியானதா என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு

பிரதமர் மோடி, 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்பதை அறிவித்துள்ளதை, உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டரில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close