Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பணபரிவர்த்தனைக்கு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள்...

மக்கள் பணபரிவர்த்தனை செய்வது தொடர்பாக ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ.500,1000 நோட்டுகளை மாற்ற வங்கிகள் கூடுதல் நேரம் திறந்திருக்கும். வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் ரூபாய் நோட்டுகளை மாற்றலாம். குறிப்பிட்ட தொகைக்கு மேல் பரிவர்த்தனை செய்ய அடையாள அட்டை கட்டாயம். குறிப்பாக வங்கியில் பணம் டெபாசிட் செய்ய, ரூ.500,1000 நோட்டுகளை மாற்றவும் அடையாள அட்டை கட்டாயம் தேவை.  இணையதளம் மூலமான பரிவர்த்தனைக்கு தடையில்லை. 18-ம் தேதி வரை ஒரு நாளைக்கு ரூ.2000-ம் ,19-ம் தேதிக்கு பிறகு ஒரு நாளைக்கு ரூ.10,000-ம் வங்கியில் எடுக்கலாம். மேலும், ரூ.4,000-க்கு மேல் தேவைப்படுவோர் பரிவர்த்தனையை காசோலை டி.டி மூலம் மேற்கொள்ளலாம்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ