Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நவம்பர் 11-ம் தேதி முதல் ஏடிஎம்களில் புதிய ரூ.2000, ரூ.500 எடுக்கலாம்!

நவம்பர் 11-ம் தேதி ஏடிஎம் மையங்களில் 2000 ரூபாய், 500 ரூபாய் விநியோகிக்கப்படும் என்று மத்திய நிதித்துறைச் செயலாளர் அசோக் லவாஸா அறிவித்துள்ளார். 

1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு அறிவித்ததால் வியாபாரிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இரவில் அனைத்து ஏடிஎம் மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் ஏடிஎம் மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ஆனால், அரசு மருத்துவமனைகள், அஞ்சலகங்கள், ரயில் நிலையங்கள், பெட்ரோல் பங்க், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிப்பு பொதுமக்களுக்கு சற்று ஆறுதல் அடைய வைத்தது. 

இந்த நிலையில், வரும் 11-ம் தேதி முதல் ஏடிஎம் மையங்களில் புதிய 2000 ரூபாய், 500 ரூபாய் எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய நிதித்துறைச் செயலாளர்  அசோக் லவாஸா இன்று அறிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close