Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ.500, ரூ.1000 ஏற்றுக் கொள்ளாத பெட்ரோல் பங்க் மீது கடும் நடவடிக்கை: பிரதான் எச்சரிக்கை

”பெட்ரோல் பங்குகள் ரூ.500, ரூ.1,000 தாள்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். மறுத்தால் அவற்றின் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ட்விட்டரில் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் 500,1000 ரூபாய் நோட்டுக்களை ஏற்க மறுக்கும் பெட்ரோல் பங்க் குறித்து பொதுமக்கள் சமூக வலைத்தளத்தில் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 

 

நவம்பர் 11-ம் தேதி நள்ளிரவு வரை பெட்ரோல் பங்குகளில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் பெறப்படும் என்று முன்னர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பிரதான் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பெட்ரோல் பங்குகளில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் பெறப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.  இந்துஸ்தான், ஐஒசி, பாரத் பெட்ரோல் உள்ளிட்ட நிறுவனங்கள்  ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் பெறப்படும் என அறிவித்துள்ளன. அதுமட்டுமின்றி  சிலிண்டர் வாங்குவோரிடமும் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் பெற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

எடிட்டர் சாய்ஸ்