Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காங்கிரஸ் செய்ததையே பா.ஜ.க.வும் செய்கிறது!

கறுப்பு பணத்தை புழக்கத்தில் விடும் பெரும் முதலாளிகள் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டி உள்ளார்.

நாகர்கோவிலில் நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் நாடு தழுவிய பிரசார பயண துவக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்தியாவில் கறுப்பு பணத்தை புழக்கத்தில் விடும் பெரும் முதலாளிகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயாராக இல்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

நாட்டில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் தற்போது விலையில்லா பொருளாக மாறிவிட்டது வேடிக்கையாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். விவசாயம் பாழடைந்து வரும் நிலையில் அதனை பாதுகாப்பதை விட்டுவிட்டு அரசு கார்ப்பரேட், பெரு முதலாளிகளுக்கு 5 லட்சம் கோடி வரை நிதி ஒதுக்குவது தான் நாட்டின் தற்போதைய நிலையாக இருப்பதாகவும் வருத்தம் தெரிவித்தார். நம் நாட்டில் கறுப்புப் பணம் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், முந்தைய காங்கிரஸ் அரசு செய்ததையே தற்போதைய பா.ஜ.க அரசும் செய்வதாகவும் பினராயி விஜயன் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ