Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செல்லாதென அறிவிக்கப்பட்ட கரன்சி நோட்டுகள் மீதும் வரி-அருண் ஜெட்லி!

நேற்று முன் தினம் இரவு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என ரிசர்வ் பேங்க் அறிவித்தது. அதனை அடுத்து பொதுமக்கள் பலரும் பணத்தை மாற்ற முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் இன்று முதல் 500,1000 ரூபாய் நோட்டுக்களை அந்தந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், வரும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வங்கிகள் இயங்கும் என்பதால் பொதுமக்கள் அந்த வசதிகளையும் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் கரன்சி நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்யும்பொழுது அவை வரி விதிப்பில் இருந்து தப்பாது. 

மேலும், இதற்கு முன்பு வங்கியில் இருந்து எடுக்கப்பட்டிருந்தாலோ, சட்ட ரீதியில் பெற்றிருந்தாலோ யாரும் பயப்பட வேண்டாம். சட்டவிரோதமாக கையில் வைத்திருக்கும் பணத்திற்கான வருவாய் கணக்கை ஆதாரமாக காட்ட வேண்டும். வீட்டுச் செலவுகளுக்காக 25ஆயிரம் மற்றும் 50 ஆயிரம் போன்ற சிறு தொகை பற்றி பொதுமக்கள் கவலை கொள்ள வேண்டாம் எனவும் பா.ஜ.க மூத்த தலைவர் மற்றும் நிதியமைச்சரும் ஆன அருண் ஜெட்லி ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close