Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய அரசின் முடிவால் குப்பையாகும் 14 லட்சம் கோடி ரூபாய்!

நம் நாட்டில் பணப்புழக்கத்தைப் பொறுத்தவரை 86 சதவிகிதம் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் மட்டுமே இருந்தன. ஆனால், பிரதமர் மோடியின் இனி ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் 14 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பணம் குப்பையாகியுள்ளது. 

ரூபாய்

நம் நாட்டில் பணப்புழக்கத்தைப் பொறுத்தவரை 1,570 கோடிக்கு 500 ரூபாய் நோட்டும், 630 கோடி 1000 ரூபாய் நோட்டும் புழக்கத்தில் இருந்தன. இப்போது ஒட்டுமொத்தமாக இந்த 2,200 கோடி ரூபாய் நோட்டுகள் குப்பையாக மாற உள்ளது. இதன் மதிப்பு அடிப்படையில் ரூ.7.85 லட்சம் கோடிக்கு 500 ரூபாய் நோட்டும், ரூ.6.33 லட்சம் கோடிக்கு 1000 ரூபாய் நோட்டும் புழக்கத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து சென்னை பல்கலைக்கழக பொருளாதார பிரிவு பேராசிரியர் ஜோதி சிவஞானத்திடம் பேசினோம். 

"மோடியின் திடீர் அறிவிப்பால் சாதகமான விஷயங்களைவிடப் பாதகமான விஷயங்கள் அதிகமாக ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது மோடியின் அறிவிப்பால் நீண்ட நாட்கள் கழித்து வேண்டுமானால் சாதகமான விஷயங்கள் ஏற்படும். விலைவாசி உயர்வு கட்டுக்குள் வரும். ஓரளவுக்கு கறுப்புப் பணம் புழக்கத்தில் குறையும். பாதகம் என்று பார்த்தால் உடனடியாக பொதுமக்களை நிச்சயம் பாதிக்கும். ஒட்டுமொத்த பணப்புழக்கத்தில் 500 ரூபாய் நோட்டு மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் 86 சதவிகிதம். இதை உடனடியாக செல்லாது என்று சொல்லும் போது கோடிக்கணக்கான பேர் பாதிக்கப்படுவார்கள்.

இதற்கு முன் 1948-ல் 1000 ரூபாய் பணத்தை பணப்புழக்கத்தில் இருந்து நிறுத்தினர். ஆனால், அப்போது அந்த பணம் பெரும் பணக்காரர்களிடம் மட்டுமே இருந்தது. ஆனால், இப்போது சாதாரண மக்களிடம் கூட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் உள்ளன. 
மோடியின் அறிவிப்பால் பணப்புழக்கம் கடுமையாகப் பாதிக்கும். இதனால் பொதுமக்களின் நுகர்வு குறையும். அரசாங்க மருத்துவமனைகளில் மாற்றிக்கொள்ளலாம் என்கின்றனர். ஆனால், அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லை. 
ஏற்கெனவே இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியிலிருந்து மீளவில்லை. 2007-08க்கு பிறகு உலக பொருளாதார மந்த நிலைக்குப் பிறகு இந்திய பொருளாதாரம் இன்னும் முன்னேற்றமடையவில்லை. பொருளாதாரம் முன்னேற்றமடைய, சூழ்நிலையில் பொதுமக்களின் செலவையும், நுகர்வையும் அதிகரிக்க வேண்டும். ஆனால், ஒரே ஒரு அறிவிப்பால் செலவை குறைப்பதால் பொதுமக்கள் செலவு செய்வது வெகுவாக குறையும். கிராமப் புறங்களில், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் செலவினங்கள் கடுமையாகக் குறையும். இதனால் இந்தியாவின் பொருளாதாரம் மீண்டும் கீழே சரிவடைய வாய்ப்பு இருக்கிறது. மோடியின் அறிவிப்பால் அடுத்த இரண்டு மாதத்தில் நுகர்வு குறைந்தால் நிறுவனங்களின் லாபம் குறையும். இதனால் பொருளாதாரம் பாதிக்கப்படும். 

இதுமட்டுமின்றி வழக்கமாக வங்கியில் ஒரு டிடி எடுப்பதற்கே ஏராளமான சிரமங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்திய மக்கள் தொகையில் 100 கோடிக்கும் மேல் உள்ளவர்கள் அடுத்த 50 நாட்களில் வங்கியை முற்றுகையிட்டால் என்னவாகும். 
500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் அமெரிக்க டாலருக்கும், தங்கத்துக்கும் அதிக தேவை ஏற்பட்டுள்ளது. அதிகளவில் பணம் வைத்தவர்கள் தங்களுடைய பணத்தை அமெரிக்க டாலருக்கு மாற்றிக் கொள்வார்கள். அதிகமாகத் தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்வார்கள். இதனால் மீண்டும் அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை உண்டாகியுள்ளது. 

இன்று ரூபாயின் தேவை குறைந்து அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு பாதிக்கப்படும். இந்தியாவில் அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறோம். ரூபாயின் மதிப்பு கீழே போகும்போது அதிக டாலர் கொடுத்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டியதால் டாலர் மதிப்பு அதிகரிக்கும். 

அடுத்து பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் அதிகளவில் பணம் செலவழிக்கப்படும். தேர்தல் சமயத்தில் கறுப்புப் பணம் அதிகளவில் வெளியேறுகிறது. இது இந்திய பொருளாதாரத்தை கடுமையாகப் பாதிக்கிறது. இப்போது இது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது" என்றார். 

மோடியின் அதிரடி நடவடிக்கையால் கறுப்புப் பணம் மற்றும் கணக்கில் காட்டாத பணம் வெளியே வரும் என்று சொல்லப்படுகிறது. இதனால் உண்மையில் கறுப்புப் பணம் ஒழியுமா என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் 

-சோ.கார்த்திகேயன் 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close