Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதிய இந்திய ரூபாய் நோட்டுகள்: பாகிஸ்தானுக்கு 'செக்' வைத்தது மத்திய அரசு

இந்தியாவின் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை போல் போலி நோட்டுகளை உருவாக்க முடியாது என புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ரூபாய் அச்சிடப்படும் இடமான மின்ட்டில் (Mint), போலி இந்திய செலாவணி நோட்டுகள் மட்டுமே அச்சிடப்படுவதாக புலனாய்வுத் துறை எச்சரித்துள்ளது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும், பாகிஸ்தான் இந்திய பொருளாதாரத்தில் ரூ.70 கோடி மதிப்புள்ள போலி நோட்டுகளை பாகிஸ்தான் புழக்கத்தில் விடுவதாகவும், அந்த தொகையை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியாகியுள்ள ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை போலியாக பிரதியெடுப்பது சாத்தியமற்றது என புலனாய்வுத் துறை கூறியுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ