Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குடிநீர் வரி, மின்சார கட்டணத்துக்கு நாளை வரை பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும்

நாடு முழுவதும் குடிநீர் வரி, மின்சார கட்டணத்துக்கு நாளை வரை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும் என்று மத்திய பொருளாதார விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் ரூ.500,1000 நோட்டுகளுக்குப் பதிலாக புதிய ரூ.500, 2000 நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துள்ளன. பழைய நோட்டுகள் அரசு மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்க்குகள், ரயில் நிலையங்களில் 11-ம் தேதி வரை செல்லும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குடிநீர் வரி மற்றும் மின்சார கட்டணத்துக்கு நாடு முழுவதும் நாளை வரை பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும் என மத்திய  பொருளாதார விவகாரத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, குடிநீர், மின்சாரத்துறை அலுவலகங்களில் நாளை வரை பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை கட்டணமாக செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close