Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூபாய் நோட்டு விவகாரம் பற்றி ரகுராம் ராஜன் என்ன சொன்னார் தெரியுமா?

2014ம் ஆண்டு லலித் தோஷி மெமொரியல் லெக்சரிலேயே இன்று எடுக்கபட்டிருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் குறித்த நடவடிக்கையைப் பற்றி பேசியுள்ளார் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர். 

'ஒருகாலத்தில் இது  கறுப்பு பணத்தை புழக்கத்தில் இருந்து எடுக்கும் வழியாக பார்க்கப்பட்டது. ஏனென்றால், பணம் எங்கிருந்து வந்தது என கணக்கு காட்டியாக வேண்டும். ஆனால், புத்திசாலிகளுக்கு இதில் எப்படி தப்பிக்க வேண்டும் என்பது தெரியும். அவர்கள் கறுப்பு பணத்தை சிறியவை சிறியவையாக பிரித்து பதுக்குவார்கள். இதற்கு வழி தெரியாதவர்கள்தான் பணத்தை கொண்டுபோய் உண்டியலில் போடுவது, எரிப்பது என இறங்குவார்கள். 

கறுப்பு பணத்தை வெளியேற்றுவது அவ்வளவு எளிதானது அல்ல. தங்கமாக பதுக்கப்படும் கறுப்பு பணத்தை மீட்பது மிகச் சிரமம். வரிகளை சரியாக கட்டமைத்தாலே கறுப்பு பணத்தைக் குறைக்கலாம்'  என்று ரகுராம் ராஜன் கூறியுள்ளார். 

எடிட்டர் சாய்ஸ்